1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2020 (07:47 IST)

திருமாவளவன் தொகுதியிலேயே ஆர்ப்பாட்டம் செய்யும் குஷ்பு: போலீஸ் தடுக்குமா?

திருமாவளவன் தொகுதியிலேயே ஆர்ப்பாட்டம் செய்யும் குஷ்பு
இந்து பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருமாவளவன் மீது குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது 
 
திருமாவளவனின் தொகுதியான சிதம்பரம் தொகுதியிலேயே நடிகை குஷ்பு மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோர் போராட்டம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இன்று காலை நடிகை குஷ்பு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து சிதம்பரம் செல்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமாவளன் தொகுதியிலேயே பாஜகவினர் போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்
 
இருப்பினும் தடையை மீறி போராட்டத்தில் குஷ்பு கலந்துகொள்ள செல்வார் என்றும் அவரை தடுத்து நிறுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனுக்கு ஜனநாயக முறையில் மட்டுமே எதிர்த்து தெரிவிக்கின்றோம் என்றும் இந்த ஆர்ப்பாட்டம் கண்டிப்பாக நடக்கும் என்றும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்