வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஜூன் 2024 (13:10 IST)

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து விசாரணை செய்ய தேசிய மகளிர் ஆணையம் குஷ்பு உட்பட 3 பேர் கொண்ட குழு அமைத்த நிலையில் இந்த குழு இன்று கள்ளக்குறிச்சி சென்று விசாரணை செய்தது. 
 
முதல் கட்டமாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இந்த வழக்கு குறித்து விவரங்களை கேட்ட குஷ்ப் உள்பட தேசிய மகளிர் ஆணைய குழுவினர் அதன் பிறகு இந்த வழக்கில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அறிந்து கொண்டனர். இதனை அடுத்து குஷ்பு செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:
 
பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்தது,  விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
 
கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும், விஷ சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
 
Edited by Mahendran