வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (12:53 IST)

வேளச்சேரி, செம்மஞ்சேரி பெயர்களில் உள்ள அர்த்தம் என்ன? குஷ்பு கேள்வி

சேரி என நடிகையும் தேசிய  மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ள நிலையில் இன்று அவர் சென்னை விமான நிலையத்தில் இது குறித்து விளக்கம் அளித்தார்.  அவர் கூறியிருப்பதாவது
 
இதுவரை நான் தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தியது இல்லை, புரிந்து கொள்ளாதவர்களை பற்றி நான் என்ன செய்ய முடியும்?  
 
வேளச்சேரி, செம்மஞ்சேரி பெயர்களில் உள்ள அர்த்தம் என்ன? அரசாங்க கோப்புகளிலேயே சேரி என்ற வார்த்தை இருக்கிறது. திரவுபதி முர்மு குடியரசு தலைவராக பொறுப்பேற்ற போது காங்கிரஸ் கட்சியினர் சொன்னது என்ன? 
 
எல்லா மக்களும் சமம் தான், நான் எந்த மக்களையும் குறிப்பிட்டு கூறவில்லை. நான் தவறாக எதுவும் பேசவில்லை. எனவே சேரி என்று பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என சென்னை, விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பேட்டி அளித்துள்ளார்.
 
 
Edited by Mahendran