1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (12:23 IST)

7 பேர் விடுதலை ஏற்புடையது அல்ல: தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, பேரறிவாளன், முருகன் உள்பட 7 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கும் மேல் என்பது ஒரு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை என்றும் அதனால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன
 
இந்த நிலையில் 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு இயற்றிய தீர்மானம் குறித்து இன்னும் கவர்னர் முடிவு எடுக்கவில்லை என்பதும் சமீபத்தில் இது குறித்து சுப்ரீம் கோர்ட் அதிரடியாக கேள்வி எழுப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும்படி அரசியல் கட்சியினர் கூறுவது ஏற்புடையதல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் கூறியிருக்கும் நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியின் தலைவர் 7 பேர் விடுதலை ஏற்புடையது அல்ல என்று கூறியிருப்பது கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்