புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 மார்ச் 2020 (14:39 IST)

லொக்கு லொக்குனு இரும்பியே பீதிய கிளப்புரானுங்க... அழகிரி அப்செட்!!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து மத்திய அரசை சாடியுள்ளார்.
 
கொரோனா வைரஸ் குறித்து பலவேறு தனியார் தொண்டு நிறுவங்கள் விழிப்புணர்வு செய்து வந்ததையடுத்து மத்திய அரசு தொலைபேசி காலர்டியூன் வழியாக விழிப்புணர்வு செய்து வருகிறது. 
 
ஒருவருக்கு போன் செய்ததும் ரிங் போவதற்கு முன்பாக இருமல் சத்தம் கேட்கும் அந்த குரல் பின்னர் கோரோனா வைரஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என அறிவுரை வழங்குகிறது. இந்த விழிப்புணர்வு நல்லதான் என்றாலும் அந்த இருமல் சத்தம் கேலிக்கு உள்ளாகியுள்ளது. 
இந்நிலையில்,  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கொரோனா குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா உயிர்க்கொல்லி நோய் மிகத் தீவிரமாக பரவி வருவதை ஆளும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவேண்டும். 
 
மத்திய சுகாதார அமைச்சகமோ, இந்திய மக்களுக்கு கைப்பேசி வாயிலாக, ஒவ்வொரு அழைப்பிலும் லொக், லொக்.... என்ற இருமல் குரலோடு ஆங்கிலத்தில் செய்தியைப் பரப்பி, இந்த பீதியை சாமான்ய மக்களிடம் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. 
 
இதை தவிர, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ அல்லது நேர்மறையான செய்திகளையோ மக்களிடத்திலே பரப்புரை செய்ய ஆளும் அரசுகள் முற்றிலும் தவறியுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.