செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (14:02 IST)

தடுப்பூசி போடலைன்னா திரையரங்கம், பொது இடங்கள் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

கிருஷ்ணகிரியில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அதிகமாக இருந்த நிலையில் தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும் கூட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரம்தோறும் நடத்தப்படுகின்றன. எனினும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 4.20 லட்சமாக உள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் திரையரங்கம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைத்து இடங்களிலும் தடுப்பூசி சான்றிதழை அவசியமாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.