ஒரு ரூபாய்க்கு புடவை: பெண்கள் முண்டியடித்து குவிந்ததால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு!
ஒரு ரூபாய்க்கு புடவை: பெண்கள் முண்டியடித்து குவிந்ததால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு!
கிருஷ்ணகிரியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் ஒரு ரூபாய்க்கு ஒரு புடவை என்ற அறிவிப்பு காரணமாக பெண்கள் முண்டியடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ஒரு ரூபாய்க்கு ஒரு புடவை வழங்கப்படுமென அறிவித்திருந்தது
முதலில் வரும் 500 பேருக்கு மட்டுமே இந்த சலுகை என்று கூறியதை அடுத்து இன்று காலை அந்த ஜவுளிக் கடையின் முன் ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
முதலில் வரிசையில் நின்று 500 பேருக்கு ஒரு ரூபாய் புடவையை ஜவுளி நிறுவனம் கொடுத்தது என்பதும் அதனை வாங்கி சென்ற பெண்கள் சந்தோஷத்துடன் செய்தியாளர்களுக்கு போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
ஒரு ரூபாய்க்கு ஒரு புடவை என்ற அறிவிப்பு காரணமாக இன்று அந்த ஜவுளிக்கடை அந்த பகுதியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது