1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (09:15 IST)

பெண்கள் கல்வி கற்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது: தாலிபன் அரசு தடை

Afghanistan
பெண்கள் கல்வி கற்பதற்காக வெளிநாடுகள் செல்ல கூடாது என ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து வரும் தாலிபான் அரசு அதிரடியாக தடை விதித்துள்ளதால் அந்நாட்டு பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆப்கானிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக தாலிபான் அரசின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பெண்களுக்கான சுதந்திரத்தை பறித்து வருவதாக கூறப்படுகிறது 
 
குறிப்பாக பெண்கள் கார் டிரைவிங் செய்யக்கூடாது என்றும், பெண்கள் அரசு பணிகளில் வேலை செய்யக்கூடாது என்றும், பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கூடாது என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது 
 
இந்த நிலையில் தற்போது பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்க தடை விதிக்கப்படுவதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மேல் கல்வி கற்பதற்காக தற்போது கஜகஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளுக்கு மாணவிகள் சென்று வரும் நிலையில் மாணவிகள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது முற்றுப்புள்ளி