வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2020 (08:38 IST)

டி.ஆர்.பாலு பதவி திடீர் பறிப்பு: கே.என்.நேருவுக்கு வழங்கப்பட்டதாக அறிவிப்பு

தி.மு.கவின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இதுவரை இருந்த டி.ஆர்.பாலு தற்போது அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே நாடாளுமன்ற குழுத்தலைவராக உள்ளார் என்பதால் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது
 
இந்த நிலையில் டி.ஆர்.பாலு வகித்து வந்த தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்று காலை திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பில், ‘தி.மு.க முதன்மைச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவரும் டி.ஆர்.பாலு, தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருவதால், அவருக்குப் பதிலாக கே.என்.நேரு எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தற்போது திருச்சி மாவட்ட செயலாளர் மற்றும் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளில் கே.என்.நேரு இருபப்தால் திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வே|றொருவருக்கு வழங்கப்படும் என்றும் அனேகமாக இந்த பதவி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு நெருக்கமானவரான அன்பில் மகேஷ்பொய்யாமொழி அவர்களுக்கு வழங்கப்படலாம் என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.