வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2017 (16:20 IST)

கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டியவர் ஆளுநராக வந்திருக்கிறார்: இளங்கோவன் சர்ச்சை கருத்து!

கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டியவர் ஆளுநராக வந்திருக்கிறார்: இளங்கோவன் சர்ச்சை கருத்து!

புதுவை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கிரண்பேடி கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டியவர் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


 
 
டெல்லியில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட கிரன்பேடியை தேர்தல் தோல்விக்கு பின்னர் புதுவை ஆளுநராக நியமித்தது மத்திய அரசு. புதுவை காங்கிரஸ் அரசின் முதல்வர் நாராயணசாமிக்கும் கிரன்பேடிக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல் போக்கு நீடித்து வந்தது.
 
இந்நிலையில் இந்த மோதல் தற்போது வெளிப்படையாகவே வெடித்துள்ளது. கிரண்பேடியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முதல்வர் நாராயணசாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். சட்டசபையிலும் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார் நாராயணசாமி.
 
இதனால் கோபமடைந்த கிரண்பேடி நான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போன்று செயல்பட முடியாது எனவும், புதுவை மாநிலம் கிடையாது இங்கு முதல்வரை விட தனக்கு தான் அதிக அதிகாரம் உள்ளது என ஒரே போடாக போட்டார்.
 
இந்நிலையில் இன்று நாராயணசாமியை சந்தித்து பேசினார் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டிய கிரண்பேடி புதுவை மாநிலத்தில் துணை நிலை ஆளுநராக வந்துள்ளார் என்றார். ஆளுநரை பார்த்து இளங்கோவன் இப்படி கூறியது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.