செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 27 ஜூலை 2020 (07:02 IST)

தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: இம்முறை அதிமுக, திமுக எம்.எல்.ஏ இல்லை!

தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா
தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உள்பட 19 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது
 
ஆம் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் 
 
அதிமுக திமுக எம்எல்ஏக்கள் மாறி மாறி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதன் முதலாக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும், இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 20 ஆக உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் நேற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஒரு ஆறுதல் விஷயமாக கொரோனாவில் இருந்து குணமாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது