செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 26 ஜூலை 2020 (19:54 IST)

மணமகன் மணமகள் உள்பட 43 பேருக்கு கொரோனா: கேரளாவில் அதிர்ச்சி

கேரளாவில் சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட மணமகன் மணமகள் உள்பட 43 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கேரளாவில் உள்ள காசர்கோடு என்ற பகுதியில் ஜூலை 17ஆம் தேதி திருமணம் ஒன்று நடந்தது. இந்த திருமணத்தில் மணமகன் மணமகள் உள்பட மொத்தம் 43 பேர் கலந்து கொண்டனர் . திருமணம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே அனைவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி எழுந்ததை அடுத்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்ததில் பாசிட்டிவ் என உறுதியானது 
 
ஒரு திருமணத்தில் மணமகன் மணமகள் உள்பட அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 43 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இது குறித்து திருமணத்தை நடத்தியவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது