1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 19 ஏப்ரல் 2018 (13:53 IST)

இனிஷியல் போலவே அவரும் எச்சைதான்? குஷ்பூ ட்விட்!

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பூ பாஜகவினருக்கு சில காட்டமான ட்விட்டுகளை பதிவு செய்துள்ளார். மேலும், அவர்களை அவமான படுத்தும் விதமாக ஒரு காரியத்தை செய்துள்ளார். 
 
குஷ்பூவின் இயற்பெயர் நக்கத் கான். இதை கண்டுபிடித்து விட்ட பாஜகவினர் இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டு வந்தனர். இதை பார்த்த குஷ்பூ அவர்களூக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். 
 
அதாவது, ஆம் என பெயர் நக்கத் கான். இதையே இப்ப தான் கண்டுபிடித்தீர்களா?  என்று கேட்டு பாஜகவினரை அசிங்கப்படுத்தினார். என் பெயர் நக்கத் கான் என்பதை நான் மறைக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.
அதோடு நிறுத்தாமல், அவர் டிவிட்டரில் தனது பெயரை குஷ்பு சுந்தர் பாஜகவுக்கு நக்கத் கான் என்று மாற்றி விட்டார். மேலும், கனிமொழியை குறித்து தவறாக விமர்சனம் செய்த எச்.ராஜா மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.  
 
குஷ்பூ பதிவிட்டுள்ளதாவது, அந்த நபரின் இனிஷியல் எச்சை என்று சரியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.