புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2020 (15:41 IST)

நீட் தேர்வில் வென்ற ஜீவித்குமாருக்கு லேப்டாப் கொடுத்த குஷ்பு!

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வின் ரிசல்ட் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அகில இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களின் முதல் மாணவராக தமிழகத்தை சேர்ந்த ஜீவித்குமார் என்பவர் வெற்றி பெற்றிருந்தார் என்பது தெரிந்ததே
 
நீட் தேர்வில் சாதனை செய்த ஜீவித்குமாருக்கு தமிழக அரசியல்வாதிகள் மற்றும் திரையுலகினர் ஏற்கனவே வாழ்த்துக்களை குவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு மாணவர் ஜீவித்குமாருக்கு லேப்டாப் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் 
 
நீட் தேர்வில் சாதனை செய்த ஜீவித்குமார் அவர்களுக்கு லேப்டாப் பரிசாகக் கொடுத்தது தான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இது ஒரு சிறிய பரிசு தான் என்றும் அவர் இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் குஷ்பு தனது டுவிட்டரில் கூறியுள்ளார்