வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (23:15 IST)

தமிழக எல்லையை ஆக்கிரமிக்கும் கேரளா? கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 100 மீட்டர் தூரத்தை கேரளா ஆக்கிரமிக்க முயற்சித்துள்ள நிலையில் தமிழக அதிகாரிகள் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்



 
 
தமிழகம் மற்றும் கேரளாவின் எல்லையாக இதுவரை ஆறுதான் இதுவரை எல்லையாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகேயுள்ள தாளூர் என்ற பகுதியை கேரளா ஆக்கிரமிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இந்த நிலையில் இந்த பகுதியில் கேரள அதிகாரிகள் தமிழக பகுதியில் கோடு ஒன்றை போட்டு தங்கள் எல்லையாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் தமிழர்கள் இதுவரை பயன்படுத்தி வந்த இடம் திடீரென கேரள மாநிலத்தின் கையில் சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக வருவாய் அலுவலர்கள் இருப்பதாக இந்த பகுதியில் குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு இதுகுறித்து நல்ல தீர்வை ஏற்பட செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.