திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (19:02 IST)

கீழக்கரை ஜல்லிக்கட்டு: 10 காளைகளை அடக்கிய வீரருக்கு ரூ.1 லட்சம் பணம் மற்றும் Thar கார் பரிசு!

jallikattu
மதுரை கீழக்கரையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்ற காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்பட்டது.
 

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் ‘’உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம்,  ரூ. 62.78 கோடி செலவில் கட்டப்பட்டு,  கலைஞர்  நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என்ற பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை கீழக்கரையில் கட்டுப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை இன்று திறந்து வைத்து, ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்தப் போட்டியில் பல பகுதிகளில் இருந்து காளைகளும், காளைகளை அடக்க வீரர்களும் ஏற்கனவே முன்பதி செய்திருந்தனர்.

இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக புதுக்கோட்டை கணேஷ் கருப்பையா என்பவரது காளை தேர்வு செய்யப்பட்டது. எனவே அவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் மஹிந்திரா ஜீப் பரிசளிக்கப்பட்டது.
jallikattu

அதேபோல், ஜல்லிக்கட்டு போட்டியில், 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அபிசித்தருக்கு ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக வழங்கப்படும் மஹிந்திரா தார் கார்  பரிசாக வழங்கப்பட்டது.