1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2024 (21:09 IST)

‘’உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா !

madurai kizhaikarai jallikattu arangam
மதுரை கீழக்கரையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, புதுக்கோட்டை வன்னியவிடுதி ஆகிய இடங்களில்   ஜல்லிக்கட்டு போட்டி நடந்தப்பட்டது. 

இந்த நிலையில், மதுரையில் உள்ள கீழக்கரையில் ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்ட நிலையில்  நாளை (24 ஆம் தேதி) திறக்கப்படவுள்ளது. அப்போது மைதானத்தில் நடைபெறும் போட்டியில்,  பங்கேற்க மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

மதுரையில் உள்ள கீழக்கரையில் ஏறுதழுவுதல் அரங்கம்  திறப்பு விழா குறித்து தமிழக அரசு,

‘’உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறப்புவிழா !

ரூ. 62.78 கோடி செலவில்  மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர்  நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார் என்பதால்  தென் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் விழாக்கோலம்   பூண்டுள்ளது'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மதுரை கீழக்கரையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.