திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 29 ஜூலை 2018 (22:01 IST)

வெளியானது மருத்துவ அறிக்கை; கருணாநிதி உடல்நலம் சீராக உள்ளது

தற்போது காவேரி மருவத்துமனை திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 
முக்கிய இரண்டு விஷயங்கள் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். 
 
அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு இருந்தது. தற்போது சீராகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிது எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
திமுக தொண்டர்கள் பெரும் அளவில் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். பலரும் தலைவா, தலைவா என்று கோஷமிட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் இந்த மருத்துவ அறிக்கை தொண்டர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.