திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஜூலை 2018 (21:52 IST)

சென்னையில் பதற்றம் - முதலமைச்சர் அவசரம் அவசரமாக சென்னை வருகை

சேலத்தில் நாளை நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு முதலமைச்சர் அவசரம் அவசரமாக சென்னை வந்து கொண்டிருக்கிறார்.
திமுக தலைவர் உடல்நிலை மோசமானதால் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரக தொற்று மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தமிழகமெங்கும் போலீஸார் பாதுகாப்பு தற்பொழுது பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் காவேரி மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் கருணாநிதியின் மருத்துவ அறிக்கை வெளியாக உள்ளது.
இந்நிலையில் சேலத்தில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அங்கு நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு அவசரம் அவசரமாக சென்னை வந்து கொண்டிருக்கிறார்.