திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 27 ஜனவரி 2018 (10:57 IST)

பிரபல நாளிதழை காரிதுப்பி கிழித்தெரிந்த கஸ்தூரி: வைரல் வீடியோ!!

இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று குடியரது தினத்தை முன்னிட்டு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். 
 
இது தொடா்பான செய்திகள் அனைத்தும் நாளிதழ்களிலும் வெளியாகின. ஆனால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்டு இந்த செய்தி வெளியிட்டுள்ளது. இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில், இந்த செய்தியை பார்த்து பொங்கி எழுந்த நடிகை கஸ்தூரி, அந்த நாளிதழை காரி துப்பு, அதனை கிழித்து போடும் காட்சியை டிவிட்டரில் வெலியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
எப்பொழுதும் சர்ச்சைகலை பற்றி டிவிட்டரில் கருத்து தெரிவிக்கும் கஸ்தூரியை பலர் விமர்சித்தாலும் கஸ்தூரியின் இந்த செயலுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.