திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

'மாரி 2' படத்தில் இசைஞானியின் பாடல்: தனுஷ் பெருமிதம்

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் 'மாரி 2' படம் உருவாகவுள்ளது என்பதி ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று இந்த படத்திற்காக யுவன் கம்போஸ் செய்த ஒரு பாடலை அவரது தந்தையும் இசைஞானியுமான இளையராஜா இன்று பாடினார். இந்த பாடல் 'மாரி 2' படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது

இந்த பாடல் குறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறிய தனுஷ், 'இசைஞானி அவர்கள் எங்களது படத்தில் பாடியது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு தெய்வீக அனுபவம் எங்கள் படக்குழுவுக்கு கிடைத்தது. இந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தையே இல்லை' என்று கூறியுள்ளார்

'மாரி 2' படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவுள்ளார் என்பதும் மேலும் முக்கிய வேடங்களில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் டொவினோ தாமஸ் நடிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.