செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (00:04 IST)

கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - எம். ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்களிடையே வாக்கு வெங்கமேடு அறிவொளி நகர் பகுதியில் சேகரித்த போது கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.
 
கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள அறிவொளி நகர், அம்மன் நகர், தில்லைநகர்,விவிஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் வீடு வீடாக நடந்து சென்று வாக்குகள் சேகரித்தார் பின்னர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர் அதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் உரையாற்றினார் அப்போது வரும் 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தலில் மூன்றாவது முறையாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி அமைய மூன்றாவது முறையாக வெற்றி பெறச் செய்யவேண்டும் என இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் மேலும் சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் நிறைவேற்றப்படும் கரூர் நகராட்சி ஆக உள்ள நிலையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அப்பொழுது பொதுமக்களிடையே கூறி வாக்குகள் சேகரித்தார்.