1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (17:57 IST)

குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் - வீடியோ

கரூர் அருகே குடிநீர் வசதி செய்துதரக்கோரி தொட்டியப்பட்டி கிராம மக்கள் பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தொட்டியப்பட்டி கிராமத்தில் 20 நாட்களாக  குடிநீர் விநியோகம் செய்து தராததை கண்டித்து அப்பகுதி கிராமமக்கள் காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். 
 
சம்பவ இடத்திற்கு வந்த லாலாபேட்டை காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க போவதாக கூறியதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-சி. ஆனந்தகுமார்