திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (11:48 IST)

அண்ணா அணிவித்த மோதிரத்துடன் கருணாநிதி அடக்கம்....

மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணா அணிவித்த மோதிரத்துடனேயே திமுக தலைவர் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட விவகாரம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
1959ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு கருணாநிதியே காரணமாக இருந்தார். அந்த தேர்தலில் திமுகவிற்கு மேயர் பதவியே கிடைத்தது. இதற்கு காரணமாக இருந்த கருணாநிதிக்கு  அண்ணா ஒரு தங்க மோதிரத்தை அணிவித்தார்.
 
அதை பொக்கிஷமாக கருதிய கருணாநிதி அந்த மோதிரத்தை எப்போதும் கழட்டவே இல்லை. உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர்கள் கூறியும் அந்த மோதிரத்தை அவர் கழட்டியது இல்லை. 
 
அவரின் உயிரோடும், உணர்வோடும், உடம்போடும் ஒன்றாக கலந்து விட்ட அந்த மோதிரம் அவர் மரணமடைந்த பின்பும் கழட்டப்படவில்லை. அந்த மோதிரத்தை அணிந்தபடியே அவர் அடக்கம் செய்யப்பட்டார்.