கலைஞர்தான் எனக்கு ரொம்ப பிடித்த தலைவர்! – அன்புமணி ராமதாஸ் புகழாரம்!
இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளில் அவர் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், திமுக கட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கலைஞர் கருணாநிதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக வயது மூப்பின் காரணமாக அவர் உயிரிழந்தார். தற்போது திமுக தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துள்ள நிலையில் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கருணாநிதியின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் விதமாக பேசியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “கலைஞர் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தலைவர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே தலைசிறந்த தலைவர் கலைஞர். சமூகநீதிக்காக பல போராட்டங்கள் நடத்தி தமிழ்நாட்டில் மாற்றங்களை கொண்டு வந்தவர். கலைஞரையும், பாமக நிறுவனர் ராமதாஸையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறேன்” என பேசியுள்ளார்.