திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 25 மே 2016 (14:09 IST)

ஐந்து வருடங்களுக்கு பிறகு சட்டசபைக்கு வந்த கருணாநிதி

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். மேலும் எம்.எல்.ஏ.வாகவும் அவர் பதவியேற்றுக் கொண்டார்.


 

 
தற்காலிக சபாநாயகர் செம்மலை கருணாநிதிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் முறைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 
 
அதன்பின் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “ சட்டப்பேரவைக்கு வருவது என் கடமை. அதனால் வந்தேன்” என்று கூறினார். 
 
கடந்த ஐந்து வருடங்களாக, அதாவது 2011ஆம் ஆண்டு, அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற பின் கருணாநிதி சட்டசபைக்கு செல்லவில்லை. தனக்கு சாய்தள வசதி செய்து தரப்படவில்லை என்றும், அதனாலேயே சட்டசபைக்கு செல்லவில்லை என்று அவர் கூறிவந்தார்.
 
இந்நிலையில், இம்முறை அவருக்கு சாய்தள வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதனால் இனிமேல் அவர் சட்டசபை கூட்டங்களில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதால் திமுக தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது