கருணாநிதியின் சிலை திறப்பு எப்போது? நாள் குறித்த திமுக..
கருணாநிதியின் சிலை திறப்பு வரும் டிசம்பர் 16ந் தேதி நடைபெற உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத்தில் எப்பொழுது நிறுவப்பட உள்ளது என பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த தாமதத்திற்கு சென்னை மாநகராட்சி சம்மதம் தெரிவிக்காததே என கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் சிலையை நிறுவ நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி கருணாநிதியின் திரூஉருவ சிலை, வரும் டிசம்பர் 16ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக திமுக கூறியுள்ளது.
மேலும் அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் சிலையானது புனரமைக்கப்பட அகற்றப்பட்டுள்ளது. கருணாநிதி, அண்ணா ஆகியோரின் சிலை ஒன்றாக ஒரே இடத்தில் வைக்கப்பட இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.