புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (18:47 IST)

அப்படி என்ன இருக்கு கொளத்தூர்ல? ஸ்டாலின் பதில்

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். கொளத்தூர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் இன்று ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழாவை துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், பள்ளி நிறுவனர்கள், ஆசிரியர்கள், மாணவ – மாணவியர் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேட்டனர். 
 
இதன் பிறகு ஸ்டாலின் பின்வருமாறு பேசினார், கொளத்தூரை விடவே மாட்டியா, கொளத்தூரில் அப்படி என்னதான் இருக்கு என கருணாநிதி என்னை எப்போதும் கேட்பார்.
 
கொளத்தூர் தொகுதியில் கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு சேவை செய்ய விரும்புகிறேன். அரசியல் பணிகளுக்கு இடையே எனக்கு நேரம் கிடைத்தால் கொளத்தூருக்குதான் வருவேன் என்றும் கொளத்தூர் தொகுதியில் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.