செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (10:11 IST)

செஸ் போர்ட் வடிவில் மிளிரும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம்

karunanidhi chess
செஸ் போர்ட் வடிவில் மிளிரும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தமிழகத்தில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என்பதும் அவருடன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
 
இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி போட்டி கலந்து கொள்ள ஏராளமான வெளிநாட்டு உள்நாட்டு விளையாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் இன்று விளையாட்டு போட்டி தொடங்க இருக்கும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் செஸ் போர்டு வடிவில்  அமைக்கப்பட்டுள்ளது என்பதும், இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது