செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:39 IST)

எனக்கு தமிழ் புத்தாண்டு சித்திரை 1 தான்: கார்த்தி சிதம்பரம் டுவிட்!

எனக்கு தமிழ் புத்தாண்டு சித்திரை 1 தான் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம், திடீரென எனக்கு தமிழ் புத்தாண்டு சித்திரை 1 தான் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் அவர் தனது டுவிட்டரில் இது திராவிடர்களை எரிச்சலூட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் இது திமுகவுடனான முரண்பாடா? அல்லது சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என்ற தனிநபர் விருப்பமா? என்ற வாதம் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.