ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச அரிசி.. காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி..!
ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து ஆக வேண்டும் என்று தீவிர முயற்சி செய்து வருகிறது என்பதும் அதற்காக இப்பொழுது முதலே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைத்தால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் நாட்டைதாரர்களுக்கு அன்ன பாக்யா என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது
இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சி பதிலடியாக என்ன அறிவிப்பு வெளியிடப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Mahendran