செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 மார்ச் 2018 (22:10 IST)

மூதாட்டியின் கைகளை கட்டி கடலில் போட முயற்சி செய்த மக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூதாட்டி ஒருவரை கைகளை கட்டி கடலில் தூக்கி போட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மணக்குடி என்ற பகுதியில் அடிக்கடி குழந்தைகள் காணாமல் போவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் மூதாட்டி ஒருவர் சந்தேகப்படும் வகையில் இருந்ததாக கூறப்பட்டது. அவர் குழந்தையை திருட வந்ததாக நினைத்த அந்த பகுதி மக்கள் அவர் கைகளை மரத்தில் கட்டி விசாரித்தனர்

அப்போது அந்த மூதாட்டி தான் பசிக்கு உணவு கேட்டு வந்ததாக அழுதபடியே கூறினார். இருப்பினும் அதனை நம்பாத அந்த பகுதி மக்கள் அவரை கைகளை கட்டி கடலில் போடுவது போல் பாவ்லா காட்டினர். இதனால் அந்த மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உண்மையிலேயே அந்த மூதாட்டி அப்பாவி என தெரிய வந்ததை அடுத்து அவருக்கு தேநீர் , சாப்பாடு கொடுத்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.