திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 28 ஜனவரி 2018 (17:44 IST)

104 வயது மூதாட்டிக்கு இடுப்பெலும்பு அறுவை சிகிச்சை

104 வயது மூதாட்டிக்கு இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை செய்து மும்பை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மும்பை தானேவை முல்லுண்டு பகுதியை சேர்ந்தவர் கங்கா லால்ஜி காலா(104). கங்கா சம்பவதன்று  படுக்கையில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். வலியால் துடித்த அவரை, அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள  மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
மருத்துவ சோதனையில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது தெரியவந்தது. மூதாட்டியின் வயதிற்கு இடுப்பு எலும்பு முறிவு அறுவைசிகிச்சை செய்வது மிகவும் ஆபத்தானது என்றாலும், நோயாளியின் நிலைமையை கருத்தில் கொண்டு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
 
இதுகுறித்து மருத்துவர்கள் பேசுகையில் இந்த வயதில் ஆபரேஷன் என்பது ஆபத்தானது. எனினும் இந்த அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது மகிழ்ச்சியைத் தருகிறது என்றனர்.