1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (16:40 IST)

ரஜினியின் அரசியல் எண்ட்ரியை கலாய்த்த ரஜினி!

ரஜினியின் அரசியல் வருகை குறித்து கனிமொழி எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தான் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியிருந்தார் என்பதும், சரியாக மூன்று வருடங்கள் கழித்து அவர் தனது அரசியல் கட்சியை அறிவிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் தனது டுவிட்டரில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பெயர் பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் அற்புதம் அதிசயம் நிகழும்; இவ்வாறு ரஜினிகாந்த் குறிப்பிட்டு உள்ளார். 
 
இந்நிலையில் ரஜினியின் அரசியல் எண்ட்ரி குறித்து திமுக எம்.பி கனிமொழி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ரஜினி லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்தாலும், வந்ததன் முடிவு தேர்தலில் தான் தெரியும் என கிண்டல் அடிக்கும் வகையில் பேசினார்.