அமித்ஷாவுக்கு கனிமொழி எம்பி எழுதிய அவசர கடிதம்: என்ன காரணம்?
சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரிகளான தந்தை மகன் மரணம் குறித்த வழக்கில் மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு காரணமாக சாத்தான்குளத்தில் பணி செய்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு நேற்று இரவு சிறையில் அடைக்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
சிபிசிஐடி போலீசார் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கைகளை நீதிமன்றமே பாராட்டியது என்பதும் ஜெயராஜ் குடும்பத்தினரும் தமிழக அரசுக்கும் சிபிசிஐடி போலீசாருக்கும் நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த விஷயத்தில் ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வந்தவர் கனிமொழி எம்பி என்பது குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது அவர் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு ஒரு அவசர கடிதத்தை எழுதியுள்ளார்
அந்த கடிதத்தில், ‘விசாரணை மரணங்கள் மற்றும் காவல்துறை சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது கனிமொழியின் இந்த வேண்டுகோளை ஏற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விரைவில் இதுகுறித்த அவசர சட்டத்தை இயற்ற முயற்சிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்