திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2017 (21:35 IST)

கமல்ஹாசன் முதுகெலும்பு இல்லாதவர். சுப்பிரமணியன் சுவாமியின் சர்ச்சை கருத்து

ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் சசிகலா-ஓபிஎஸ் பிரச்சனை வரை பல்வேறு சமயங்களில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும், உலக நாயகன் கமல்ஹாசனும் டுவிட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.




அந்த வகையில் தற்போது சுப்பிரமணியன் சுவாமி கமல் குறித்து கூறுகையில், ',கமல்ஹாசன் முதுகெலும்பு இல்லாதவர் போல் கருத்து கூறுவதாக சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறினார்

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கமல்ஹாசன் தனது டுவிட்டரில், 'கருத்து தெரிவிக்கும் வகையில் ஒரு எலும்பு எனக்கு உள்ளது. அதுவே போதுமானதாகும்.சுப்ரமணியன் சாமி தமிழர்களை பொறுக்கிகள் என அழைத்து வருகிறார். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அவசியமில்லை. மக்களே பார்த்துக் கொள்வார்கள்' என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் அவரது ரசிகர்கள் #TNstandswithkamal என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில் சுப்பிரமணியன் சுவாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.