1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (13:36 IST)

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் - கமல்ஹாசன் அதிரடி

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்நிலையில், அவரது பிறந்த நாளான இன்று அவர் ஒரு செல்போன் செயலியை அறிவிப்பார் என ஏற்கனவே செய்தி வெளியாகிவிட்டது.
 
சென்னை தி.நகரில் தனது நற்பணி மன்ற செயலி அறிமுக விழாவில் அவர் கலந்து கொண்டு பேசி வருகிறர். அப்போது, மையம்விசில் எனும் செயலியை அவர் அறிமுகம் செய்தார். மேலும், #maiamwhistle உள்ளிட்ட சில ஹேஷ்டேக்குகளை அவர் அறிமுகப்படுத்தினார்.
 
அப்போது பேசிய அவர் “தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் தற்போது பழுதடைந்துள்ளன. கட்சியின் பெயரை இப்போது அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. கட்சியை தனியாக தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அவசரமும் இல்லை. சினிமா எடுக்கவே 6 மாதங்கள் பணி செய்வேன். அரசியல் அதை விட பெரிய பணி. நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது என் கனவு.
 
அக்கிரமங்களுக்கு எதிராக எழும் குரல் தற்போது குறைந்து விட்டது. நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது. உங்கள் உதவியுடன் அது நடக்கும். தீயவை நடக்கும் போது பயன்படும் கருவியாக மையம் விசில் ஆப் செயல்படும். மக்களுடன் சேர்ந்த மக்கள் பணி செய்வதே என் இலக்கு" என தெரிவித்தார்.