வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 18 டிசம்பர் 2019 (14:15 IST)

ஸ்டாலினுக்கு போன் செய்த கமல்! – பேரணியில் கலந்து கொள்வாரா?

திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கமல்ஹாசன் போன் மூலம் ஸ்டாலினுடன் பேசியுள்ளார்

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. அனைத்து கட்சிகள் சேர்ந்த எதிர்ப்பு போராட்டமாக இது இருக்க வேண்டும் என்ற நோக்கில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெரும்பாலும் திமுக கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் வரவில்லை.

இந்நிலையில் கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் ”குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் 23ம் தேதி மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது. இந்த பேரணியில் கலந்து கொள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் போன் மூலம் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவருக்கும் பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

கமல்ஹாசன் திமுக தலைவருக்கு போன் மூலம் பேசியுள்ள நிலையில் பேரணியிலும் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கமல் திமுகவுடன் இணைவாரோ என்ற வதந்திகளும் அரசியல் வட்டாரத்தில் கிளம்ப தொடங்கியுள்ளன.