புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2019 (08:36 IST)

நாங்கள் சொல்வதால் வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை – ரஜினிக்கு ஆதரவாக கமல் !

நல்ல தலைவர்களுக்கான வெற்றிடம் இல்லை என ரஜினி சொன்ன கருத்த கமல் ஆதரித்து பேசியுள்ளார்.

கடந்தவாரம் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ‘தமிழகத்தில் நல்ல தலைவர்களுக்கான வெற்றிடம் இன்னும் அப்படியேதான் உள்ளது’ எனக் கூறி திரியைக் கொளுத்திப் போட்டார். இதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன், ’அந்த இடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,’ரஜினி என்ன பெரிய தலைவரா ?. நடிகர்கள் வயசாவதால் அரசியலுக்கு வருகின்ற்னர்’ என எதிர்வினையாற்றினர்.

இந்நிலையில் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக அவரது நண்பர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று  செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நல்ல தலைவர்கள் இருந்தார்கள். அதை மறுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தற்போது நல்ல தலைமைக்கு ஆள் இல்லை என்பதைத்தான் நாங்கள் சொல்கிறோம். அதில் வருத்தப்பட்டு எந்த பிரயோஜனமுமில்லை’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.