திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2019 (12:53 IST)

அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மைதான்: முன்னாள் திமுக அமைச்சர்

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரண்டு ஆளுமையுள்ள தலைவர்கள் மறைந்ததில் இருந்து தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அந்த வெற்றிடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பிவிட்டதாக அதிமுகவினர்களும், முக ஸ்டாலின் நிரப்பிவிட்டதாக திமுகவினர்களும் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த்’தமிழகத்தில் ஆளுமையுள்ள, சரியான அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது என்றும், இன்னும் அதை யாரும் நிரப்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு அரசியல் வேறுபாடு இன்று ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் ’ரஜினி கூறியது போல் தமிழகத்தில் தலைமை தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் அந்த வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திமுக தலைவரின் மகனுமான முக அழகிரி தெரிவித்துள்ளார். முக அழகிரியின் இந்த கருத்து முக ஸ்டாலின் உள்பட திமுக பிரமுகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது