இன்று முதல் 2ஆம் கட்ட பிரச்சாரம்: கமல் செல்லும் நகரங்கள் எவை எவை?
இன்று முதல் 2ஆம் கட்ட பிரச்சாரம்: கமல் செல்லும் நகரங்கள் எவை எவை?
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் மதுரை உள்பட தென்மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
திங்கள் முதல் வியாழன் வரை தேர்தல் பிரசாரம் செய்த கமலஹாசன் வெள்ளிக்கிழமை ஓய்வு எடுத்துவிட்டு சனிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் அவர் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாஸன் இன்று தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் காஞ்சிபுரம் ஆலந்தூர் போரூர் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே தென் மாவட்டங்களில் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி இருந்த நிலையில் தற்போது சென்னை காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார். இன்று முதல் வியாழன் வரை அவர் சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது