வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (20:20 IST)

பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலில் கமல் போட்டியிட மாட்டார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நடிகர் கமல்ஹாசன் இடைதேர்தல் மட்டுமின்றி பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட மாட்டார் என்றும் ஏனெனில் அவரது கட்சியில் தேர்தலில் போட்டியிட ஆளில்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலுடன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ''அரசியல் கட்சித் துவங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இந்த தேர்தலில் மட்டுமல்ல, பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தல் உட்பட எந்த தேர்தல் நடந்தாலும், அதில் போட்டியிட மாட்டார். ஏனென்றால் தேர்தலில் போட்டியிட அவரது கட்சியில் ஆட்கள் இல்லை.

ஏற்கனவே இன்று காலை கமல் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அமைச்சர் ஜெயகுமார் கூறியதால் கடும் ஆத்திரத்தில் உள்ள கமல் ரசிகர்கள், தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்தால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.