1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2021 (21:29 IST)

எதையெதையோ திறந்து கல்லா கட்டுபவர்களே, இதையும் திறங்கள்: கமல்ஹாசன் டுவீட்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது 5வது கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று உள்ளார் என்பது தெரிந்ததே
 
கோவை பகுதியில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு பொதுமக்கள் அளித்து வருகிறார்கள் என்பதும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கானோர் கூடி அவரது அவருக்கும் அவரது கட்சியினரும் ஆதரவு அளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் மார்க்கெட் 9 மாதங்களாக திறக்கவில்லை என்றும் இதனால் 900 குடும்பங்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்று எதைஎதையோ திறந்து கல்லா கட்டும் அவர்கள் இதை திறக்கவும் வழி செய்யலாமே என்று தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்
 
அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது: கோபிச்செட்டிப்பாளையம் மார்க்கெட் 9 மாதங்களாகத் திறக்கவில்லை. 900 குடும்பங்கள் பட்டினி கிடக்கிறார்கள். எதையெதையோ திறந்து கல்லா கட்டுபவர்களே, அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் உங்களைத் தேய்ப்பது திண்ணம்