சென்னையில் கமல்ஹாசனின் முதல் பொதுக்கூட்டம்: பிரமாண்ட ஏற்பாடு
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதனையடுத்து ஆன்லைன் மூலம் அவரது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் கட்சியில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி திருச்சியில் அடுத்த பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறும் என்று கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார். ஆனால் அதற்கு முன்னரே அதாவது மார்ச் 8ஆம் தேதி சென்னையில் மக்கள் நீதி மய்யம்' கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் இந்த கூட்டதில் கமல் பேசவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
தனது கட்சியில் அதிகளவில் பெண்களை உறுப்பினர்களாக சேர்க்கவே மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தில் பொதுக்கூட்டத்தை கூட்ட கமல் முடிவு செய்துள்ளார். ஆழ்வார்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் இந்த கூட்டம் சென்னையில் நடத்தப்படும் முதல் பொதுக் கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த கட்சியின் உயர் மட்ட குழு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.