ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு பதில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துங்கள்: கமல்ஹாசன்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு பதில் முதலில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முயற்சி செய்யுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் நேற்று இந்தியாவில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதாகவும் ஆனால் மற்ற மாநிலங்களில் பல்வேறு கட்டமாக தேர்தல் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு கடந்த சில மாதங்களாக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் கமல்ஹாசன் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் முறையை ஏன் அமல்படுத்த கூடாது? என்று தெரிவித்துள்ளார்
உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து கமல்ஹாசன் இந்த யோசனையை தெரிவித்துள்ளார். இந்த யோசனையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முயற்சி எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva