Daily Horoscope
✕

எச்.ராஜா டுவிட்டை காப்பி அடித்தாரா கமல்ஹாசன்?

Written By siva
Updated: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (20:14 IST)
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் என்பதும் இந்த அறிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசின் நிர்வாகம் பெற்ற கடன்கள் செலவு செய்ததை ஆகிய கொள்கைகள் ஆகியவை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக இந்த வெள்ளை அறிக்கையில் ஒவ்வொரு தமிழரின் குடும்பத்திற்கும் 2.63 லட்சம் ரூபாய் கடன் இருப்பதும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வெள்ளை அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்துக்களை கூறி வரும் போது சற்று முன் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம் என்றும் தெரிவித்திருந்தார் 
 
ஆனால் இதே கருத்தை கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக பாஜக பிரபலம் எச் ராஜா அவர்கள் கூறியபோது, நேற்று தமிழக நிதியமைச்சர் அளித்தது வெள்ளை அறிக்கையா? மஞ்சள் கடுதாசியா? என்று குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து கமல்ஹாசன் எச் ராஜாவின் டுவிட்டை காப்பி அடித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது
 
 

எல்லாம் காட்டு

கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....

இந்த முட்டாள்களுக்கு இது தெரியாதா?.. திமுகவை திட்டிய ஆதவ் அர்ஜுனா!...

நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!...

வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments