1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 22 ஜூன் 2024 (11:01 IST)

140 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. 5 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம்: கள்ளக்குறிச்சி கலெக்டர்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 140 பேர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும், 56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
 
மேலும் கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது என்றும், உரிய மனநல ஆலோசனைக்கு பிறகே வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கூறியுள்ளார்.
 
மேலும் அரசின் ஆணைப்படி பாதிக்கப்பட்டு இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளும் மேற்கொள்கிறோம் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.
 
மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டு தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருந்த 20 இடங்களில் மருத்துவ குழுவினர் தொடர் ஆய்வு செய்து வருவதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.
 
Edited by Mahendran