வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (14:16 IST)

வெற்றிக்கு முன்னே கோலாகலமான அண்ணா அறிவாலயம்

வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக முன்னிலையில் இருப்பதால் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 5ம் தேதி நடந்த மக்களவை தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 10 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில் 4,78,855 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆன்ந்த் முன்னிலையில் இருக்கிறார்.

8460 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பின்தங்கியிருக்கிறார். 12,588 வாக்குகளே எண்ணப்பட வேண்டியது உள்ளது. திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் முன்கூடியே வெடிவெடித்து கொண்டாடி வருகின்றனர் திமுக தொண்டர்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.