ஆன்மீக அரசியல் போலியானது: ரஜினியை கடுமையாக விளாசிய கி.வீரமணி!
நடிகர் ரஜினி ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார். இந்நிலையில் உலக நாத்திகர் மாநாட்டில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ரஜினியின் ஆன்மீக அரசியல் போலியானது என விளாசினார்.
திருச்சியில் திராவிடர் கழகம் சார்பில் மணியம்மை பள்ளி வளாகத்தில் உலக நாத்திகர் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஆ.ராசா, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழகத்தில் ஆன்மீக அரசியல் நடத்தப்படும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். அது போலியானது, உண்மையில் அந்த மாதிரி ஒன்று இல்லை. ஆன்மா, ஆன்மீகம் இவை அனைத்தும் போலியானது. ஏமாற்றுவதற்காகவே இந்த வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
உணர்வுகளை உருவாக்கும் ஆன்மா கூடு விட்டு கூடுமாயுமாம். இதேபோல தான் தற்போது கூடு விட்டு கூசு பாய்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆன்மா என்றாலே பித்தலாட்டம் தான் என்றார் அவர்.