Daily Horoscope

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தீர்ப்பு!.. 9 பேரும் குற்றவாளிகள்!...

Written By Mahendran
Updated: திங்கள், 23 மார்ச் 2026 (19:29 IST)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரையும் கடந்த 2020ம் வருடம் விசாரணைக்காக கூட்டி சென்ற காவல்துறையினர் காவல் நிலையத்தில் வைத்து ஒரு நாள் முழுதும் அவர்களை கடுமையாக தாக்கியதில் அவர்கள் உயிரிழந்தனர்..

இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 காவல்துறை அதிகாரிகளை போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். பால் துரை என்பவர் மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த உயிரிழந்தார்..

இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்டம் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்த.து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த மகளிர் காவல் துறை அதிகாரிகள் ரேவதி,  பியூலா உள்ளிட்ட சிலர் சாட்சியளித்தார்கள். கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது..

அதன்படி வழக்கில் தொடர்புடைய 9 காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். தந்தை மகன் இருவரின் உடலிலும் மரணத்தை ஏற்படுத்தும் காயங்கள் இருந்திருக்கிறது.. அந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. காவல்துறை அதிகாரிகள் தாக்கியதால் தான் அவர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியிருக்கிறது. எனவே இது கொலையாக நீதிமன்றம் கருதுகிறது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர். எஸ்.ஐ ரகு கணேஷ். பாலகிருஷ்ணன் கிட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் கருதுகிறது.
இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை விபரம் வருகிற 30-ஆம் தேதி அறிவிக்கப்படும்’ என நீதிபதி தீர்ப்பளித்தார்.<>

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments